TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2019 1691 days 736 0
  • திருச்சி, ஆம்பூர், திருப்பூர், வேலூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 206 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை முன்கூட்டியே  வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank - ADB) ஒப்புக் கொண்டுள்ளது.
    • மேலும் இந்த நிதியுதவியானது மேம்பபடுத்தப்பட்ட சேவைகளை வழங்குதலுக்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களையும் வெகுவாக பலப்படுத்த இருக்கின்றது.
  • இந்தியக் கடற்படையானது கொல்கத்தாவில் துபோலேவ் TU - 142 என்ற விமான அருங்காட்சியகத்தை அமைக்கத்  திட்டமிட்டுள்ளது. TU - 142 என்பது ரஷ்யாவால் (முன்னர் சோவியத் யூனியன்) தயாரிக்கப்பட்ட கடல்சார் உளவு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களாகும்.
  • ஸ்வீடனின் மன்னரான 16வது கார்ல் குஸ்டாஃப் மற்றும் ராணி சில்வியா ஆகியோர் மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு பயணம் செய்வதற்காக இந்தியா வந்துள்ளனர். மேலும் இவர்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
  • கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகியோர் தங்களது தாய் நிறுவனமான “ஆல்பபெட்” நிறுவனத்தின் தலைமைப் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
    • கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை ஆல்பபெட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
  • மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது நிறுவனங்கள் சட்டம், 2013ன் விதிகளின் படி, சுயாதீன இயக்குநர்களின் தரவு தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
    • நிறுவனங்களில் சிறந்த பெருநிறுவன நிர்வாக நடைமுறைகளை உறுதி செய்வதில் சுயாதீன இயக்குநர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்