TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2019 1690 days 707 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது தேசிய மற்றும் சர்வதேசப் பங்காளர்களுடன் இணைந்து “யுவாஹ்” என்ற ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
    • இந்த முன்னெடுப்பானது இந்தியாவை 10 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மொரீஷியஸ் நாட்டின் அதிபராக பிருத்விராஜ்சிங் ரூபன் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதியன்று வழக்குரைஞர்கள் தினம் கொண்டாடப் படுகின்றது. இவர் தொழில் ரீதியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
  • இந்தியாவானது "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" அதிவிரைவு இடைமறிப்பு விமானத்தை மாலத் தீவின் கடலோர காவல் துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது. இது மாலத்தீவின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது திவால் (நொடித்தல்) நடவடிக்கைகளுக்காக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Dewan Housing Finance Corp. Ltd - DHFL) என்ற நிறுவனத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்குப் (National Company Law Tribunal - NCLT) பரிந்துரைத்துள்ளது.
    • இந்த நடவடிக்கையின் மூலம் சாத்தியமான கடன் தீர்விற்காக NCLTக்குச் செல்லும் முதலாவது நிதிச் சேவை நிறுவனமாக DHFL உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்