TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2019 1687 days 630 0
  • திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு துணி மற்றும் சணல் பைகளைக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
  • நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு முதன்முறையாக 450 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது மத்திய ரிசர்வ் வங்கியைச் சந்தையில் இருந்து டாலர்களை வாங்குவதற்கு வழி வகுத்துள்ளது. இதனால் இந்தியப் பணமான ரூபாயின் மதிப்பு துரித அதிகரிப்பை தடுக்க  முடிகின்றது.
  • மதுபான அதிபர் விஜய் மல்லையாவுக்கு அடுத்து, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று 2018 ஆம் ஆண்டு “தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின்” படி அறிவிக்கப்பட்ட இரண்டாவது தொழிலதிபராக நீரவ் மோடி உள்ளார்.
    • உலகெங்கிலும் உள்ள வங்கிகள் பயன்படுத்தும் மென்பொருளில் மோசடி செய்ததன் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ .10,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
  • பவன் சூறாவளி என்பது வட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவான 8வது சூறாவளி ஆகும். இந்தப் பிராந்தியத்தில் 1976 ஆம் ஆண்டில் உருவாகிய ஒன்பது சூறாவளிகளுக்குப்  பிறகு ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சூறாவளிகள் உருவானது இதுவேயாகும்.
    • உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதல்களுடன் இலங்கையின் பரிந்துரைப்  படி இந்த சூறாவளிக்கு 'பவன்' என்ற பெயர் சூட்டப் பட்டுள்ளது.
  • ஒடிசாவில் பாயும் மகாநதி நதியின் பல கிளை நதிகளில் ஒன்றான சுகபைகா நதியானது அரசாங்கத்தின் பராமரிப்பு இல்லாததன் காரணமாக படிப்படியாக குறைந்து வற்றியுள்ளது. இந்நதியானது ஆற்றங்கரை அரிப்புக்கு உள்ளாகி, ஆறு முழுவதும் பூங்கோரைகள் நிறைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்