TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2019 1684 days 676 0
  • உலக வர்த்தக அமைப்பின் பிரச்சினைத் தீர்வு அமைப்பின் மேல்முறையீட்டு குழுவில் உள்ள உறுப்பினர்களின் நியமனங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.
    • எனவே, மேல்முறையீட்டுக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் அந்த அமைப்பின் உறுப்பினர்களால் ஒரு ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் சிறந்த வாழ்வை மேம்படுத்துவதற்கும் “பசுமையான (சுற்றுச்சூழலுக்கு உகந்த) சிறந்த செயல்கள்” என்ற ஒரு முன்முயற்சியை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் தொடங்கினார்.
  • ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான அலையன்ஸ் ஏர் என்ற துணை நிறுவனமானது, RCS-UDAN (பிராந்திய இணைப்புத் திட்டம் - உததேஷ் காஆம்நாக்ரிக் / Regional Connectivity Scheme – UdeDeshKaAamNagrik) என்ற திட்டத்தின் கீழ் குவஹாத்தி முதல் திமாபூர் வரை மற்றும் திமாபூர் முதல் இம்பால் வரையிலான தனது முதலாவது விமானப் பயணங்களைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்