தொற்றா நோய்கள் (non-communicable diseases - NCDs) குறித்த ஒரு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஒரு சுகாதார நலப் புத்தாக்க மையத்தை அமைப்பதற்கு இந்தியாவும் சுவீடனும் ஒன்றாக இணைந்துள்ளன.
2019 ஆம் ஆண்டானது சுகாதாரத் துறையில் இந்தியா - ஸ்வீடனின் 10 ஆண்டு கால ஒத்துழைப்பைக் குறிக்கும் ஸ்வீடன் - இந்தியாவின் சுகாதார ஆண்டைக் குறிக்கின்றது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் மற்றும் போர்த்தந்திரத் திறன்களை மேம்படுத்துவதற்காக “அயர்ன் யூனியன் 12” என்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.