TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 15 , 2019 1681 days 596 0
  • மத்தியத் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் 2019 ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு நெறிமுறையை மக்களவையில் அறிமுகப் படுத்தியுள்ளார்.
    • இந்த மசோதாவானது பல்வேறு நலன்சார் நடவடிக்கைகள் குறித்த எட்டு வெவ்வேறு மசோதாக்களை ஒன்றிணைக்கின்றது. மேலும் இது அமைப்புசாரா துறையில் உள்ள 50 கோடி ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கவும் முற்படுகின்றது.
  • புதுச்சேரி அரசு ஒரு புதிய ஸ்டார்ட் - அப் (புதிய தொழில் தொடங்குதல்) கொள்கையை வெளியிட்டுள்ளது.
    • இது ஸ்டார்ட் - அப் காப்பகங்களை (மையங்களை) அமைப்பதை ஆதரிப்பதற்கும் கூடுதலான பணியாற்றும் இடங்களை உருவாக்குவதற்கும் 10 கோடி மதிப்பிலான நிதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ‘உலகின் சக்திவாய்ந்த 100 பெண்மணிகள்’ என்ற  தலைப்பைக் கொண்ட 2019 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ்  பட்டியலின் 16வது பதிப்பில் ஜெர்மனியப் பிரதமரான ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
    • இந்தப் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் சுவீடனைச் சேர்ந்த பெண்மணியான கிரெட்டா துன்பெர்க் 100வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்