TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 2 , 2020 1663 days 895 0
  • ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மாற்றியமைக்கப்பட்ட டிஎன்ஏவை சரிசெய்யும் ஒரு புரதத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்துள்ளது.
    • மாற்றியமைக்கப்பட்ட டிஎன்ஏவை சரிசெய்யும் விதமாக 'டிஎன்ஏ புரதங்கள்' எனப்படும் சிறப்பு வகைப் புரதங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஹரியானாவின் கர்னால் என்னுமிடத்தில் உள்ள புதிய அனாஜ் மண்டியில் “அடல் கிசான் மஜ்தூர் உணவகத்தினை” திறந்து வைத்துள்ளார்.
    • ரூ.10க்கு உணவைப் பெறும் வகையில் அமைந்த இந்த உணவகமானது விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிதும் பயனளிக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணுசக்தி நிலையங்கள் குறித்த ஒப்பந்தத்தினைப் பரிமாறிக் கொண்டன. இதன் மூலம் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கிக் கொள்வதை தடுக்க முடியும்.
    • இந்த நடைமுறையானது 29 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்