TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 3 , 2020 1662 days 980 0
  • 2017 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியப் பளு தூக்கும் வீரரான சீமா என்பவருக்கு தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையத்தினால் அடுத்த 4 ஆண்டுகளுக்குப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு “மறுமலர்ச்சி மனிதன் - அருண் ஜெட்லியின் பல்வேறு முகங்கள்” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • அருண் ஜெட்லியைப் பற்றி விவரிக்கும் இந்த புத்தகமானது தீபா வெங்கட் மற்றும் முப்பவரபு ஹர்ஷவர்தன் ஆகியோரால் தொகுக்கப் பட்டுள்ளது.
  • தனியார் மயமாக்கப்பட்ட இந்தியக் கப்பல் கழகத்தின் (Shipping Corporation of India  - SCI) முழுநேரத் தலைவராகவும் அதன் நிர்வாக இயக்குநராகவும் (Chairperson and Managing Director - CMD) ஹர்ஜீத் கவுர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த நியமனத்தின் மூலம் 13வது CMDயாகவும் SCIயின் முதலாவது பெண் CMDயாகவும் இவர் உருவெடுத்துள்ளார்.
  • ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மான் என்பவர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இளைய பந்து வீச்சாளர் என்ற ரஷீத் கானின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமானது மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ்  ஆகிய நாடுகளை இந்தியப் பெருங்கடல் பிராந்திய (Indian Ocean Region - IOR) பிரிவில் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்