TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2020 1655 days 867 0
  • விசாகா உத்சவம் என்பது ஆந்திரப் பிரதேச மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் விசாகப் பட்டின பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றினால் விசாகப் பட்டினத்தில் நடத்தப்படும் ஒரு வருடாந்திர சுற்றுலா நிகழ்வாகும்.
  • குஜராத் மாநில முதல்வரான விஜய் ரூபானி அகமதாபாத்தில் 31வது சர்வதேச காற்றாடித் திருவிழாவைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • அமெரிக்காவின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிச் சங்கத்தின் (Universities Space Research Association - USRA) தலைமையிலான ஒரு புதிய ஆராய்ச்சியானது பூமியின் சகோதரி கிரகமான வெள்ளிக் கிரகத்தில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் (உயிர்ப்புள்ள) இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • “எபிபானி” என்ற ஒரு கிறித்துவத் திருவிழாவானது கோவா மற்றும் கேரளா ஆகிய இந்திய மாநிலங்களின் சில பகுதிகளில்  கொண்டாடப்பட்டது.
    • கோவாவில் இந்தக் கொண்டாட்டமானது அதன் போர்ச்சுக்கீசியப் பெயரான ‘ஃபெஸ்டா டோஸ் ரெய்ஸ்’ என்ற பெயரிலும் கேரளாவின் சில பகுதிகளில் அதன் சிரியப் பெயரான ‘டென்ஹா’ என்ற பெயரிலும் அறியப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்