TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 2 , 2020 1632 days 689 0
  • இந்திய தனியார் மின்னணு வரத்தக நிறுவனமான அமேசான் ஆனது மும்பையை அடுத்து,  தனது இரண்டாவது சில்லறை வணிக விற்பனைக் கூடத்தை கொல்கத்தாவின் சீல்டா ரயில் நிலையத்தில் அமைத்துள்ளது.
  • ஐ.நா சபையானது இந்தியாவின் கீதா சபர்வாலை தாய்லாந்து நாட்டில்  ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது.
    • ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பாளர் பதவியானது ஐ.நா. வளர்ச்சி அமைப்பின் மிக உயர்ந்தப் பதவி ஆகும்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அடுத்த 5 ஆண்டுகளில் 500 குறைந்த செலவிலான செயற்கைக் கோள் ஏவுதல் வாகனங்களைத் தயாரிக்க இருக்கின்றது.
    • இந்த வாகனங்கள் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களைத்  தாங்கிச் செல்லும் திறன் கொண்டவையாகும்.
  • மூத்த பெண்ணியவாதி, சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான வித்யா பால் என்பவர்  2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று காலமானார்.
    • இவர் அனைத்து இந்து மத வழிபாட்டு இடங்களிலும் பெண்களை அனுமதிக்கும் சட்டத்தை அமல்படுத்தக் கோரி 2016 ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
  • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெட்டுக்கிளித் தாக்குதல்களை சமாளிக்க பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை அறிவிக்கப் பட்டுள்ளது.
    • 2020 ஜனவரி மாத இறுதிக்குள், இந்திய எல்லையான குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களுக்கு அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்