TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 3 , 2020 1631 days 717 0
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பத்திரிக்கையானது “சம்விதான்” (அரசியலமைப்பு) என்ற ஒரு வார்த்தையை 2019 ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்போர்டு இந்தி வார்த்தையாக தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது (Indian Coast Guard - ICG) கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் 3வது அதிவேக இடைமறிப்புப் படகான சி - 448ஐ பணியில் இணைத்துள்ளது.
  • நாட்டின் முதலாவது மற்றும் மிகப் பெரிய “பயணவழி பறவைக் கூடானது” (walk-through)  மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வீரமாதா ஜிஜாபாய் போன்ஸ்லே உதயன் மிருகக்காட்சிச் சாலையில் திறக்கப் பட்டுள்ளது. இது பைகுல்லா மிருகக் காட்சி சாலை என்றும் அழைக்கப் படுகின்றது.
  • தொலை ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடியான டாக்டர் பிரதாப் சவுகான் என்பவர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸில் 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஆயுர்வேத ரத்தன் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, அதிக அளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலகின் இரண்டாவது நாடு சீனா ஆகும்.
    • இந்த அறிக்கையின் படி, சீனாவானது ஆயுதத் தயாரிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையிலும் ரஷ்யாவை விட முன்னிலையிலும் உள்ளது.
  • கத்தாரின் புதிய பிரதமராக ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்லாசிஸ் அல் தானி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீஃபா அல் தானி என்பவருக்குப் பின் இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்