TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2020 1629 days 664 0
  • ஈராக் நாட்டின் புதிய பிரதமராக முகமது தவ்ஃபிக் அல்லாவி நியமிக்கப்பட்டுள்ளார். இது 2019 ஆம் ஆண்டின் ஈராக் புரட்சி அல்லது திஸ்ரின் அல்லது அக்டோபர் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வாகும்.
  • அகில இந்தியப் பத்திரிக்கை வெளியீட்டு (All India Reporters - AIR) ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ‘கற்றல் மற்றும் சம்பாதித்தல்’ என்ற ஒரு திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr Ambedkar Law University - TNDALU) முடிவு செய்துள்ளது.
    • இந்தத் திட்டமானது சட்ட மாணவர்கள் தாங்கள் சட்டப் படிப்பைத் தொடரும் போதே சம்பாதிக்கவும் வழிவகை செய்கின்றது.
  • புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் உதயனோ உட்சவத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
    • அங்கு உள்ள முகலாயத் தோட்டங்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கும்.
  • ஹர்மீத் தேசாய் என்பவர் யுடிடி 81வது தேசிய மேசைப் பந்தாட்ட சாம்பியன்ஷிப்பில் தனது முதலாவது தேசிய ஆண்கள் ஒற்றையர் மேசைப் பந்தாட்டப் பட்டத்தை வென்றுள்ளார்.
    • இந்தப் போட்டியானது தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது.
  • உலகின் மிகப்பெரிய சூரியத் தொலைநோக்கியானது சூரியனின் முதலாவது விரிவான படத்தை வெளியிட்டுள்ளது.
    • டேனியல் கே. இனோயி சூரியத் தொலைநோக்கியானது (Daniel K. Inouye Solar Telescope - DKIST) உலகின் மிகப்பெரிய சூரியத் தொலைநோக்கி ஆகும்.
  • மணிப்பூரைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான பாலா தேவி என்பவர் ஒரு வெளிநாட்டு அமைப்பிடமிருந்து தொழில்முறைசார் ஒப்பந்தத்தைப் பெற்ற முதலாவது இந்திய பெண் கால்பந்து வீராங்கனை என்ற சாதனையைப் படைத்து உள்ளார்.
    • இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கால்பந்து நிறுவனமான ரேஞ்சர்ஸ் எஃப்சி என்ற நிறுவனத்துடன் 18 மாத கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் மற்ற 13 விளையாட்டு வீரர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்