TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 7 , 2020 1627 days 709 0
  • குழாய் நீரானது இந்தியத் தர நிர்ணய விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பகுதிகளில் உள்நாட்டு எதிர்ச் சவ்வூடு பரவல் அமைப்புகளைத் தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலத்தை (Purified Terephthalic Acid - PTA) இறக்குமதி செய்வதற்கான பொருள் குவிப்புக்கு எதிரான வரியை மத்திய அரசு ரத்து செய்வதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
  • ஐசட்நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனமானது (Indian Veterinary Research Institute - IVRI) மரபு வழிப் பன்றிக் காய்ச்சல் (classical Swine Fever - CSF) செல் தடுப்பூசியை உருவாக்கி வருகின்றது.
    • CSF என்பது பன்றிகளில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாகும். இது அதிக அளவிலான இறப்புகளை ஏற்படுத்துகின்றது.
  • நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற ஒரு பெண்மணி விண்வெளியில் மிக நீண்ட நாட்கள் தங்கியிருந்து, பின்னர் தற்பொழுது பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.
    • இவர் 328 நாட்கள் (11 மாதங்கள்) சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station - ISS) இருந்துள்ளார்.
  • மேற்கு ரயில்வே துறையானது முதன்முறையாக மின்சார என்ஜின்களின் அடையாளக் குறியிடுதலை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது ரயில்வே துறைக்குக் கூடுதலாக ரூ. 1.05 கோடி வருவாயை ஈட்ட உதவ இருக்கின்றது.
  • மேற்கு ஒடிசா & சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றின் ஒரு முக்கியமான பொதுச்  சுகாதார மையமான விம்சார் என்ற மையத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இறந்துள்ளனர்.
    • விவசாயிகளின் இந்த இறப்புகளுக்குக் காரணம் பாராக்வாட் எனப்படும் விவசாய வயல்களில் பயன்படுத்தப்படும் ஒரு களைக் கொல்லியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்