TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 8 , 2020 1626 days 798 0
  • இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான 2020 ஆம் ஆண்டின் அமைச்சர்கள் மட்டத்திலான பாதுகாப்புத் துறை சந்திப்பானது  புது தில்லியில் நடைபெற்றது.
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது முதன்முறையாக கிராமங்களை வரைபடமிடுவதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது.
    • இது நில அளவீட்டுப் பணிகளை மாற்ற இருக்கின்றது. இந்த வரைபடமிடுதலானது நேரடியாக அல்லது செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் செய்யப்பட இருக்கின்றது.
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேச நிர்வாகமானது பொதுச் சுகாதார பொறியியல் & நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையை (PHE & IFC - Public Health Engineering and Irrigation and Flood Control Department) ‘ஜல் சக்தித் துறை’ என்று பெயர் மாற்றியுள்ளது.
  • ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது “AIM-4” என்ற மூலக்கூறைக் கண்டுபிடித்துள்ளது. இது “லூ கெஹ்ரிக் நோய்” என அழைக்கப்படும் “அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்லரோசிஸ்” (ALS - Amyotrophic Lateral Sclerosis) எனப்படும் ஒரு அரிய நரம்பியக் கடத்தல் நோய்க்கு சிகிச்சையளிக்க உதவ இருக்கின்றது.
  • உலகின் முதலாவது மற்றும் அறிமுகமற்ற பாடகரான லார்ட் ஜே என்பவர் தனது சுயசரிதைப் புத்தகமான “லார்ட் ஜே: லார்ட் ஆஃப் அனானிமிட்டி” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவின் படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 100 அங்கன்வாடி (அல்லது பகல்நேர பராமரிப்பு மையம்) பயனாளிகளில் 7 பயனாளிகள் மட்டுமே நகர்ப் புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்