TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 11 , 2020 1623 days 682 0
  • டிஜிட்டல்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆளுகையை உருமாற்றுவதற்காக மின் ஆளுகை மீதான 23வது தேசியக் கருத்தரங்கானது மும்பையில் நடத்தப் பட்டது.
    • இந்தக் கருத்தரங்கு மும்பைப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • “சிமோர்க்” அல்லது “பீனிக்ஸ்” என்ற ஒரு ஈரானிய விண்கலமானது குறைந்த வேகத்தின் காரணமாக “ஜாபர் 1” என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அதன் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தத் தவறியது.
  • கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் மீதான ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான ஒரு மேம்படுத்தப்பட்ட மையமானது சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் அமைய இருக்கிறது.
    • இந்த மையமானது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மையம் என்று கருதப் படுகிறது.
  • வேலூர் நகர மாநகராட்சியானது சிறப்பான திடக் கழிவு மேலாண்மைக்காக மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது.
    • இந்த விருதானது “நுண் கலப்பு உர மையங்களின்” உருவாக்கம் மற்றும் அவற்றின் வெற்றிகரமான செயல்பாட்டிற்காக “நீர் மற்றும் துப்புரவிற்கான பொலிவுறு நகரத் திட்டம்” என்பதின் கீழ் முதல் முறையாக வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய – இரஷ்ய இராணுவத் தொழில்துறைக் கருத்தரங்கின் 5வது பதிப்பானது 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் போது நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்