TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 13 , 2020 1621 days 740 0
  • உலக உடல் வியாதி தினம் என்பது ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தின் விருந்து தினமாகும். இத்தினமானது பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்பட்டது.
    • இந்தத் தினமானது 1992 ஆம் ஆண்டில் இரண்டாம் போப் ஜான் பால் அவர்களால் நிறுவப் பட்டது.
  • உலக சுகாதார நிறுவனமானது (WHO - World Health Organisation) தற்பொழுது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் நோய்க்கு ‘கோவிட் -19’ என்று பெயரிட்டுள்ளது.
    • இந்தப் புதிய பெயரானது "கொரோனா", "வைரஸ்" மற்றும் "நோய்" ஆகிய மூன்று  சொற்களிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. இதில் 2019 ஆனது இந்த வைரஸ் தோன்றிய ஆண்டைக் குறிக்கின்றது.
  • கேரளாவைச் சேர்ந்த மூத்த இஸ்ரோ விஞ்ஞானியான ஜி. நாராயணன் என்பவர் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (NewSpace India Ltd - NSIL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    • NSIL ஆனது இந்திய விண்வெளி நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வணிகப் பிரிவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்