அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (United Nations High Commissioner for Refugees - UNHCR) ஒவ்வொரு ஆண்டும் அகதிகள் பயணிக்கும் தூரத்தை அறிந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு உலகளாவியப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது 2 பில்லியன் கிலோமீட்டர் தொலைவு குறித்த ஒரு பாதுகாப்புப் பிரச்சாரம் என்று அழைக்கப் படுகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி, ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவன கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்கை ஒரு முறை மறுசீரமைப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு வருடம் அதாவது 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முந்தைய வழிகாட்டுதல்களின்படி, மறுசீரமைப்பானது 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் செயல்படுத்தப்பட இருந்தது.
புதுச்சேரி சட்டமன்றமானது 2019 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Citizenship Amendment Act - CAA), தேசியக் குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (National Population Register - NPR) ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 2020 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டெஸ்ட் தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.