TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 17 , 2020 1617 days 678 0
  • இந்தியப் பெண்ணியவாதி அறிஞரும் ஆர்வலருமான கீதா சென் என்பவர் 2020 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க டான் டேவிட் பரிசினை “நிகழ்காலம்” என்ற பிரிவின் கீழ் வென்றுள்ளார்.
  • விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டின் MILAN பயிற்சிக்கான வலைதளமானது (www.milan2020.org.in) தொடங்கப் பட்டுள்ளது.
    • இந்தப் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டு முதல் அந்தமான் நிக்கோபர் கட்டுப்பாட்டகத்தின் கீழ் உள்ள இந்தியக் கடற்படையினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது.
  • ராஜீவ் பன்சால் என்பவரை ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இந்திய அரசு நியமித்துள்ளது.
  • குத்துச் சண்டை வீரரான அமித் பங்கல் என்பவர் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (International Olympic Committee’s - IOC) தரவரிசையில் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
    • பெண்கள் தரவரிசையில் இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் என்பவர் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • 79 மில்லியன் ஆண்டுகள் பழமையான தனடோதெரிஸ்டுகளின் (தொட்டாற் சுணக்கம்) புதைபடிவங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
    • டைரனோசர்கள் என்பது இறைச்சியை உட்கொள்ளும் மிகப்பெரிய டைனோசர் இனங்களில் ஒன்றாகும்.
  • எரிசக்தி வள நிறுவனத்தின் (The Energy Resources Institute - TERI) முன்னாள் தலைவரும் இயக்குநருமான ராஜீந்திர குமார் பச்சௌரி புது தில்லியில் காலமானார்.
    • இவர் 2007 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் (Intergovernmental Panel on Climate Change - IPCC) சார்பாக அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்