TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2020 1616 days 742 0
  • திருச்சியைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் பெண்மணியான ரேஷ்மா என்பவர் பிரதமரின் வருடாந்திர தேசிய மாணவர் படைப் பேரணி – 2020ன் போது  பிரதமரிடமிருந்து அகில இந்திய சிறந்த பயிற்சி மாணவி என்ற விருதைப் பெற்று உள்ளார்.
  • ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேச நிர்வாகமானது ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய தலைநகரங்களில் முதலாவது உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு - 2020ஐ நடத்த உள்ளது.
  • கேரள முதல்வரான பினராயி விஜயன் கேரளாவில் உள்ள கொச்சியில் “யோதவ்” (வாரியர்) என்ற கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
    • இந்தச் செயலியைப் பயன்படுத்தி, பொதுமக்கள் போதைப் பொருள் மற்றும் அதன் விநியோகம் குறித்த தகவலை காவல் துறையினருக்கு தெரிவிக்க முடியும்.
  • பீகாரின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையானது “ஜல் ஜீவன் ஹரியாலி” என்ற  பிரச்சாரத்தின் கீழ் மாநிலத்தில் மரங்களை நடும் நடைமுறையை ஊக்குவிக்கும் நோக்கில் `பியார் கா பவுதா` (அன்பினால் ஒரு தாவரம்) என்ற ஒரு இயக்கத்தைப் பாட்னாவில் தொடங்கியுள்ளது.
  • மணிப்பூர் மாநில முதலமைச்சரான நொங்தோம்பம் பைரன் சிங் கிழக்கு இம்பாலில் உள்ள அரப்தி மாயை லைகா எனும் இடத்தில் “அங்கன்பூ ஹன்பா” (முதல் நெற் பயிர் விதைப்பு) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவானது தனது 582வது கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை (ஜூலை - ஜூன்) 2020 - 21ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் நிதியாண்டுடன் (ஏப்ரல் - மார்ச்) ஒன்றிப் பொருந்துமாறு அமைக்கப்  பரிந்துரை செய்துள்ளது.
  • கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டின் உலகக் கைபேசி மாநாட்டை ஜிஎஸ்எம் கூட்டமைப்பு (கைபேசி தகவல் தொடர்புக்கான உலகளாவிய அமைப்பு - Global System for Mobile Communication) ரத்து செய்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்