TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 22 , 2020 1612 days 677 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அவர்களால் அந்நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • ரிஷி சுனக் என்பவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார்.
  • 5 வயது நிரம்பிய வில்வித்தை உலக சாம்பியனான சஞ்சனா (தமிழ்நாடு) என்ற சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
    • கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற மிகவும் இளம் வயது நபர் இவராவார்.
  • அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி வெற்றி பெற்றுள்ளார்.
  • முதலாவது தனித்து இயங்கக்கூடிய “மனித விமான” நிகழ்ச்சியானது துபாயில் நடைபெற்றது.
    • ஜெட்மேன் வின்ஸ் ரெஃபெட் என்பவர் புறப்பட்டு, 30 வினாடிகளில் சராசரியாக 130 கடல் மைல்கள் வேகத்தில் 1000 மீட்டர் உயரத்தை எட்டினார்.
  • டிசி அமைப்பிற்கான (DC Circuit) அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய - அமெரிக்கர் என்ற பெருமையை ஸ்ரீ சீனிவாசன் பெற்றுள்ளார்.
    • அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்ததாக இருக்கும் இந்த டிசி அமைப்பானது மிகவும் சக்தி மிக்க அமைப்பாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்