TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 3 , 2020 1603 days 590 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 5 -15 வரையிலான தேதிகளில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்த ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியானது (Geneva International Motor Show - Gims) இப்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
  • முஹைதீன் யாசின் என்பவர் மலேசியாவின் புதிய பிரதமராக உருவெடுத்துள்ளார்.
  • கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் டூட்டி சந்த் (ஒடிசா) 2வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • வழக்கமான பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளைப் பாதிக்கும் வேலை நிறுத்தங்கள், பேரணிகள் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் ஆகியவற்றைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் வளாகங்களில் நடத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • OECD (பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு - Organisation for Economic Co-operation and Development) அமைப்பானது 2020 ஆம் ஆண்டிற்கான தனது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை 6.2 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைத்துள்ளது.
    • இது உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளது.
  • சில நாடுகள் கொரோனா நோய்க் கிருமியைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனமானது புதிய கொரோனா வைரஸிற்கான உலகளாவிய ஆபத்து மதிப்பீட்டை “கடுமையான” நிலையிலிருந்து “மிகக் கடுமையான” நிலைக்கு உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்