TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2020 1595 days 608 0
  • திட்டமிடப்பட்ட இந்திய – அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (Military Cooperation Group - MCG) சந்திப்பானது கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
  • எச்ஐவி நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தப் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு மருந்துகளைக் கொண்ட ஒரு கலவையானது முதன்முறையாக, கோவிட் - 19 பாதிப்பிற்காக ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வயது முதிர்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்கு வழங்கப்பட்டது.
    • லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகிய மருந்துகளின் கலவையாக இந்த மருந்து இருக்கின்றது.
  • அண்மையில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக ரிலையன்ஸ் தொழில்துறையின் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின் செல்வம் மிக்கவர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளார்.
    • ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீட்டின் படி, சீன நாட்டைச் சேர்ந்த மின்னணு வணிக நிறுவனமான “அலிபாபா” குழுமத்தின் நிறுவனரான ஜாக் மா என்பவர் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்