TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2020 1587 days 616 0
  • கீழடியில் (சிவகங்கை மாவட்டம்) நடத்தப்பட்டு வரும் ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சியில், 2500 ஆண்டுகள் பழமையான பெரிய அளவிலான பானை ஒன்று  கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • தில்லியின் துணைநிலை ஆளுநர் தனது சொந்த விருப்ப உரிமையின் பேரில், தில்லி காவல்துறை மற்றும் தேசியத் தலைநகர்ப் பகுதி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக சட்ட அதிகாரிகள் அல்லது வழக்கறிஞர்களை அரசியலமைப்பு நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு நியமிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • இந்த உத்தரவானது மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ், தொற்று நோய் மேலாண்மைக்காகப் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காலிக விதிமுறைகள் அடங்கிய பொது அறிவிப்பை அரசாங்கம் வெளியிட மற்றும் அரசாங்கம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க அல்லது எந்தவொரு நபரும் அதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
  • பீகார் அரசாங்கம் COVID-19ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்து, தொற்றுநோய் நோய்கள் சட்டம் 1897 என்ற சட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் பீகார் தொற்று நோய்கள் COVID-19 விதிமுறைகள் 2020 என்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Rajalakshmi March 25, 2020

Group2 online class available ?

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்