TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 13 , 2018 2348 days 797 0
  • தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway - SCR) மண்டலமானது தனது அதிகார பொறுப்பில் இருக்கும் அனைத்து இரயில் நிலையங்களிலும் 100 சதவீதம் எல்இடி (LED) விளக்குகளைப் பொருத்தியுள்ளது.
    • அனைத்து இரயில் நிலையங்களிலும் எல்இடி விளக்குகளைப் பொருத்திய நாட்டின் முதல் இரயில் மண்டலம் இதுவாகும்.
    • இந்த நடவடிக்கையின் விளைவாக நாட்டில் 32 இலட்சம் யூனிட்டுகள் வரை மின்சாரம் மிச்சப்படுத்தப்படும். இதனால் அரசுக்கு ஆண்டிற்கு7 கோடி ரூபாய் அளவுக்கு செலவு குறையும்.
  • பீகார் மாநில அரசு சிகரெட் சில்லறை விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இதன் மூலம், உத்திரகண்ட், ஹிமாச்சலப்பிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி மற்றும் ஏனைய பிற மாநிலங்களைத் தொடர்ந்து பீகார் 12ஆவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்