TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 12 , 2020 1563 days 570 0
  • இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பானது யுனிசெப் அமைப்புடன் சேர்ந்து பழங்குடியின வாசிகள் கூட்டாக இணைந்து பாதுகாப்புடன் பணியாற்றுவதற்காக டிஜிட்டல் தகவல் தொடர்பு உத்தியைத் தொடங்கியுள்ளது.
    • இந்தத் திட்டமானது சமூக விலகலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தேசிய தலைநகர்ப் பகுதியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஷீல்ட் என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை (Operations Shield) தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.
    • SHIELD என்பது முடக்குதல், வீடுகளில்  தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், உள்ளூர் சுகாதாரம் மற்றும் வீடுகளுக்கே சென்று சோதனையிடல் என்பதைக் குறிக்கின்றது.
  • பஞ்சாப் மாநில அரசானது அம்மாநிலத்தில் கோவிட் – 19 தொற்று நோய்க்கான முடக்கத்தை மே ஒன்றாம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஒடிசாவிற்குப் பிறகு ஊரடங்கை நீட்டித்த இரண்டாவது மாநிலம் பஞ்சாப் ஆகும்.
    • பஞ்சாப் மாநிலம் குளிர்கால – வசந்த காலப் பயிர்களை அறுவடை செய்வதற்காக முடக்கத்திலிருந்து சில மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்