TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 17 , 2020 1558 days 650 0
  • மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் மாநில நிவாரண நிதி ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் நன்கொடைகள் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமைச் செலவினமாக (CSR - Corporate Social Responsibility) கருதப்பட மாட்டாது என்று கூறியுள்ளது. ஆனால் “PM CARES” நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் CSR ஆகக் கருதப்படும் என்று கூறியுள்ளது. 
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையமானது இரட்டை அடுக்கு கொண்ட காதி முகமூடிகளைத் தயாரித்துள்ளது.
    • இந்த முகமூடிகள் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி மற்றும் கம்பளியால் மட்டுமே தயாரிக்கப் பட்டுள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது நாட்டில் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
    • 1979 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கிடையேயான இடப்பெயர்வுத் தொழிலாளர்கள் நலச் சட்டமானது நாட்டில் இடப்பெயர்வுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்