TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 19 , 2020 1556 days 552 0

 

  • தில்லி அரசானது மக்களின் வீடுகளுக்கேச் சென்று ஆய்வை மேற்கொள்வதற்காக “அசெஸ் கொரோ னா” என்ற ஒரு செயலியைத் தொடங்கியுள்ளது.
    • இந்தச் செயலியானது கோவிட் – 19 நோய்த் தொற்று கட்டுப்படுத்தும் மண்டலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்திய அரசானது மண்டிகளுக்கு (சந்தைகளுக்கு) விவசாயிகளின் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு உதவுவதற்காக “கிரிஷி ரத்” என்ற ஒரு செயலியைத் தொடங்கியுள்ளது. 
    • வர்த்தகர்கள் இந்தச் செயலியின் மூலம் வேளாண் உற்பத்திப் பொருள்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். வர்த்தகர்கள் பல்வேறு விவசாயிகளினால் அனுப்பப் பட்டுள்ள சரக்குகளை இதன் மூலம் ஒருங்கிணைக்க முடியும். 
  • ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது இந்தியாவின் சுகாதார நல அமைப்புகளை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளிக்க இருக்கின்றது. 
    • சமீபத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியானது இந்தியாவிற்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்க உள்ளதாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்