TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2020 1552 days 596 0
  • அமெரிக்க அதிபரான டெனால்டு ட்ரம்ப் இந்திய – அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை அமெரிக்க தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமித்து உள்ளார்.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது கொரானா வைரஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவுவதற்காக தனது கட்டுப்பாட்டு அறையில் இரண்டு புதிய உதவி மைய எண்களை அறிவித்துள்ளது.
    • 1930 (அகில இந்திய அளவில் இலவச உதவி எண்) மற்றும் 1944 (வடகிழக்கு மாநிலங்களுக்கு என்று பிரத்தியேகமாக) ஆகியவை இந்த 2 எண்களாகும்.
  • உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப் பழமையான தேசியப் பூங்காவான ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது விலங்குகளுக்காக தனிமைப்படுத்துதல் வசதிகளைக் கட்டமைத்துள்ளது.
    • விலங்குகளுக்கான தனிமைப்படுத்துதல் வசதி அமைக்கப் பட்டுள்ள  இந்தியாவின் முதலாவது தேசியப் பூங்கா இதுவாகும்.
  • இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மோட்டார் – சைக்கிள் உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது பிரிட்டனைச் சேர்ந்த நார்டான் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்குவதற்காக 20 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. 
    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறிய ஜாகுவார் நிறுவனத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்தின் மீது ஆசிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒப்பந்தம் இதுவாகும்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் இயக்குநரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா என்பவர் ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் மற்றும் இதர 11 நபர்களை தனது அயலக ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
    • கோவிட் – 19 தொற்றிற்கான எதிர்வினைகள் உள்ளிட்ட உலகம் முழுவதும் நிகழும் வளர்ச்சி மற்றும் முக்கியமான கொள்கைப் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கோணங்களை இது அளிக்கின்றது.  
  • கோவா மாநிலத்திற்குப் பிறகு, கோவிட் – 19 தொற்று நோயற்ற மாநிலமாக மணிப்பூர் மாநிலம் உருவெடுத்துள்ளது.
    • இந்த வரிசையில் இந்தியாவில் 2வது மாநிலம் இதுவாகும்.
  • தமிழ்நாடு மாநிலத்தில் கோவிட் – 19 பாதிப்புகளின் பரிசோதனைகளுக்கு உதவுவதற்காக, அம்மாநிலத்திற்கு 8 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட 40,000 பிசிஆர் உபகரணங்களை டாடா குழுமம் வழங்கியுள்ளது.
  • தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு  உறுதித் திட்டத்தின் கீழ் பணியாளர்களின் தினக் கூலியானது 229 ரூபாயிலிருந்து 27 ரூபாய் அதிகரிக்கப் பட்டு, 256 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
  • முன்னணியில் இருக்கும் 7 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களான மும்பை, தில்லி, குவஹாத்தி, கான்பூர், மதராஸ், ரூர்க்கி ஆகியவை டைம்ஸ் உயர் கல்வி (THE - Times Higher Education) நிறுவனம் மேற்கொள்ளும் உலகத் தர வரிசையில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளன.
    • இவை, THE தரவரிசையின் வெளிப்படைத் தன்மை குறித்து சந்தேகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்