TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 27 , 2020 1548 days 741 0
  • “வித்யாதான் 2.0” என்பது மின்னணு கற்றல் (e-learning) உள்ளடக்கப் பங்களிப்புகளை வரவேற்பதற்கான ஒரு தேசியத் திட்டமாகும்.
    • இது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தொடங்கப் பட்டுள்ளது.
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது தொடக்க நிலைக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி (8 ஆம் வகுப்பு வரை) வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வி ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
  • கர்நாடக மாநில அரசனாது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக “ஆப்தமித்ரா” என்ற கைபேசிச் செயலி மற்றும் ஒரு உதவி எண்ணைத் தொடங்கியுள்ளது. 
  • கப்பல் போக்குவரத்தின் முன்னாள் பொது இயக்குநரான மாலினி சங்கர் அவர்களால் தலைமை தாங்கப்படும் வகையில் தேசியக் கப்பல் போக்குவரத்து வாரியத்தை மாற்றி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தியக் கப்பல் போக்குவரத்து தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் உயரிய அமைப்பு இதுவாகும். 
  • கோவிட் – 19 நோய்த் தொற்று வெடிப்பு தொடங்கியதிலிருந்து, அதில்  பாதிக்கப்படாத ஒரே இந்திய மாநிலம் சிக்கிம் ஆகும்.
    • கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவற்றிற்குப் பிறகு கொரானா நோய்த் தொற்று அற்ற 3வது மாநிலம் திரிபுரா ஆகும்.
  • தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் தேர்தல் ஆணையரான இந்திய ஆட்சிப் பணி அதிகாரி  சோ.அய்யர் சீர் மரபினர் (Denotified Community) நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 1891 ஆம் ஆண்டின் ஆங்கிலேய மணிப்பூர் போரில் போரிட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக மணிப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று கொங்ஜோம் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
    • மணிப்பூரின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு வேண்டி பிரிட்டீஷாருக்கு எதிராக மணிப்பூரில் உள்ள கொங்ஜோமின் கேபா மலைப் பகுதியில் ஏற்பட்ட போரில் இவர்கள் உயிர் நீத்தனர்.
  • தடை செய்யப்பட்ட மருந்துக் கலவையின் அளவு மட்டுமே குற்றவாளியின் தண்டனையை முடிவு செய்யும் என்றும் மருந்தின் தூய்மைத் தன்மையானது தண்டனையை முடிவு செய்யாது என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
    • 1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டம் என்பதின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் இது தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்