TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2020 1546 days 657 0
  • மொத்தமுள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கோவிட் – 19 தொற்று நோயற்ற மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.
    • மேகாலயா, அசாம் மற்றும் மிசோரம் ஆகிய 3 இதர மாநிலங்களில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
  • சவுதி அரேபியாவானது குழந்தைகளின் மீதான குற்றங்களுக்காக கசையடியை ஒரு மரண தண்டனையாக அறிவிப்பதை ஒழித்துள்ளது.
    • தற்பொழுது நீதிபதிகள் அதற்கான மாற்று வழி முறையாக அபராதங்கள், சிறைத் தண்டனைகள் மற்றும் பாதுகாவலற்ற சிறைத் தண்டனைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • நிலவின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு வரைபடமானது மெய் நிகர் வடிவில் (1:5,000,000 என்ற அளவில்) அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS - United States Geological Survey), தேசிய விண்வெளிப் பயண மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA - National Aeronautics and Space Administration) மற்றும் நிலவுக் கோள் நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
    • இது நிலவின் முதலாவது டிஜிட்டல், ஒருங்கிணைந்த, உலகளாவிய நிலப்பரப்பு வரைபடம் ஆகும்.
  • புனேவில் உள்ள தடுப்பு மருந்து நிறுவனமான இந்தியக் குருதி ஊனீர் நிறுவனமானது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் மேம்படுத்தப்பட்ட கோவிட் – 19 தடுப்பு மருந்தின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்து உள்ளது.
    • ஏற்கெனவே இந்த நிறுவனம் இதற்கு முன்பு மலேரியா நோய்த் தடுப்பு மருந்து திட்டத்திற்காக, தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் உலகளாவிய 7 நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்