TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 3 , 2020 1542 days 671 0
  • கேரள அரசு அம்மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் அடுத்த 6 மாத காலத்திற்கு 6 நாட்கள் என்ற அளவில் ஊதியப் பிடித்தத்திற்கான (மாதம் 6 நாட்கள்) அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவச் சேர்க்கைக்கான தேசியத் தகுதி காண் நுழைவுத் தேர்வானது அரசியலமைப்பின் கீழ் உள்ள சிறுபான்மையினர் உரிமைகளை மீறவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
    • இந்தத் தீர்ப்பானது 2012 ஆம் ஆண்டில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழங்கப் பட்டுள்ளது.
  • ஜெர்மனியானது தனது நாட்டில் ஹெஸ்புல்லாஹ் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
    • ஹெஸ்புல்லாஹ் என்பது லெபனான் நாட்டில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய அரசியல் கட்சியாகும்.
  • இந்தியக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பானது சர்வதேசக் குத்துச் சண்டை மன்றத்திற்குப் போட்டியை நடத்துவதற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் ஆண்களுக்கான உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை இந்தியா இழந்துள்ளது.
    • தற்பொழுது இந்தப் போட்டித் தொடரானது செர்பியாவினால் நடத்தப்பட இருக்கின்றது.
  • பஞ்சாப் மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவலைக் கையாளுவதற்காக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
  • ஒரு தலைசிறந்த வங்கித் துறை நிபுணரான சுரேஷ் என் படேல் என்பவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவருக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரான சஞ்சய் கோத்தாரி அவர்களால் காணொலி மூலம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 
  • நாகாலாந்து மாநில அரசானது பெட்ரோல் மற்றும் டீசலின் மீது கோவிட் – 19 செஸ் கட்டணத்தை விதித்துள்ளது. இந்தியாவில் கோவிட் – 19 செஸ் கட்டணத்தை அறிமுகப் படுத்திய முதலாவது மாநிலம் நாகாலாந்து ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்