TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 4 , 2020 1541 days 697 0
  • மணிப்பூரின் சக்-ஹாவ் என்று அழைக்கப்படும்  கருப்பு அரிசி, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் களிமண் பொம்மைகள் (டெரகோட்டா) மற்றும் கோவில்பட்டியின் கடலை மிட்டாய் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
    • 2004-05 ஆம் ஆண்டில், டார்ஜிலிங் தேநீருக்கு இந்தியாவில் முதல் புவிசார் குறியீடு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
  • தேசிய உள்கட்டமைப்புத் தொடர் (National Infrastructure Pipeline) குறித்த அதானு சக்கரவர்த்தி தலைமையிலான பணிக்குழு தனது இறுதி அறிக்கையை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
    • 2025 நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் இலக்கை நிறைவேற்றுவதில் தேசிய உள்கட்டமைப்புத் தொடரானது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.
  • இந்தியாவின் பஹால் திட்டத்திற்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சர்வதேச மேம்பாட்டிற்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனமானது அறிவித்துள்ளது.
    • பஹால் என்பது மலிவான சுகாதார அணுகல் மற்றும் நீண்ட ஆயுளுக்கான ஒரு கூட்டாண்மை ஆகும்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகமாக கருதப்படும் மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்திற்கான  பாதுகாப்பு நிறுவனமானது, “அதுல்யா” எனப்படும் நுண்ணலை உயிர்க்கொல்லியை வடிவமைத்துள்ளது.
    • கோவிட்-19 வைரஸை சிதையச் செய்ய இது பயன்படுத்தப் படுகிறது.
  • கோவிட்-19 மீது கவனம் செலுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக் குழுவானது  YASH என்பதை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • YASH (Year of Awareness on Science and Health) – என்பதன் விரிவாக்கம் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆண்டு என்பதாகும்.
  • ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது சந்திரனில் தரையிறங்குவதற்கான புதிய முறைகளை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ், ப்ளூ ஆரிஜின் மற்றும் டைனடிக்ஸ் ஆகிய மூன்று விண்வெளி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
    • இது 2024 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை சந்திரனுக்குக் கொண்டுச் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்