TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 7 , 2020 1538 days 759 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூய்மையான கங்கைக்கான தேசியத் திட்டமானது “IDEAthon” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
    • இது கோவிட் – 19  நோய்த் தொற்று எவ்வாறு நதி மேலாண்மை உத்திகளை மாற்றியமைக்கும் என்பதை ஆராயும் “நதி மேலாண்மையின் எதிர்காலம்” என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • ரோப்பரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது ஒரு தனிச்சுதந்திர தொகுதி உதவியாளர்களை அல்லது வார்டு பாட்டுகளை ('WardBot') வடிவமைத்து உள்ளது.
    • இது தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் உள்ள கோவிட் – 19 நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் உணவுகளைச் சென்று வழங்கும் திறன் கொண்டது.
  • அசாம் மாநில அரசானது மருந்துகளை வீடுகளுக்கேச் சென்று வழங்குவதற்காக “தன்வந்தரி” என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இதன்படி 200 ரூபாய்க்குக் கீழே உள்ள மருந்துகள் அங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன.
  • இமாச்சலப் பிரதேச மாநில சுகாதாரத் துறையானது மின்னணு சஞ்சீவனி-ஒபிடி என்ற இணையவாயிலின் மூலம் நோயுற்றவர்களுக்கு, அவர்களின் குடியிருப்புகளில் இலவசமாக ஆன்லைனில் (நிகழ்நேர) அறிவுரைகளை வழங்குதல் என்ற ஒரு தனித்துவமான கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றின் ஒரு பகுதியாக பிளாஸ்மா சிகிச்சையைச் சோதனை முயற்சியாகத் தொடங்கிய நாட்டின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராகேஷ் சர்மா என்பவர் சர்வதேச மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் சங்கத்தின் (IMMA - International Motorcycle Manufacturers Association) தலைவராக 2 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப் பட்டு உள்ளார்.
    • IMMA என்பது உலக அளவில் இரு சக்கர வாகனங்களின் உற்பத்தித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சங்கமாகும்.
  • “பாரத் சந்தை” என்று அழைக்கப்படும் ஒரு தேசிய மின்னணு முறையிலான வர்த்தகச் சந்தையானது அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பினால் (CAIT - Confederation of All India Traders) தொடங்கப் பட்டுள்ளது.
    • இந்த முன்னெடுப்பானது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தினால் வழி நடத்தப்பட்டு, ஆதரிக்கப் படுகின்றது.
  • அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்திய-அமெரிக்கரான அசோக் மைக்கேல் பிண்டோ என்பவரை சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கிக்கான (IBRD - International Bank of Reconstruction and Development) அமெரிக்கப் பிரதிநிதியாக நியமித்துள்ளார்.
    • IBRD, அதன் கடன் வழங்கும் அமைப்புகள் மற்றும் சர்வதேச வளர்ச்சி மன்றம் ஆகியவை இணைந்து “உலக வங்கி” என்று அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்