TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2020 1537 days 705 0
  • அமெரிக்கக் கருவூலத் துறையானது கோவிட் – 19 தொற்றின் மத்தியில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக வேண்டி இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்குக்  கடன் வாங்கப் படும் என்ற கூறியுள்ளது.
  • ஆர்க்டிக் காலநிலை மற்றும் அதன் சுற்றுச்சூழலைக் கண்காணிப்பதற்காக இந்த ஆண்டின் இறுதியில் ரஷ்யா தனது முதலாவது ஆர்க்டிகா.எம் என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இருக்கின்றது.
  • 2021 ஆம் ஆண்டின் இளையோர் காமன்வெல்த் போட்டியானது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தேதியுடன் ஒத்துப் போவதால்  அது 2023 ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
    • 17வது இளையோர் காமன்வெல்த் போட்டியானது 2021 ஆம் ஆண்டில் டிரினிடாட் மற்றும் டோபாகோவில் நடைபெறுவதாக இருந்தது.
  • இந்தியக் கடற்படையானது வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக “சமுத்திர சேது” (கடற் பாலம்) என்ற ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
    • இந்த நடவடிக்கையின் கீழ், ஐஎன்எஸ் ஜலஸ்வா மற்றும் மஹர் ஆகியவை இந்தியக் குடிமக்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக மாலத் தீவில் உள்ள மாலி துறைமுகத்திற்குக் கிளம்பியுள்ளது.
  • சீனாவின் புதிய லாங் மார்ச் 5பி என்ற செயற்கைக் கோளை ஏந்திச் செல்லும் விண்கலனானது தனது முதலாவது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
    • இது விண்வெளிக்குள் நாட்டின் புதிய தலைமுறை விண்வெளி வீரர்களை கொண்டுச் செல்லும் சோதனை முயற்சி மற்றும் விண்வெளியில் இருந்து சரக்கைத் திரும்பக் கொண்டு வரும் சோதனை முயற்சி ஆகியவற்றை மேற்கொள்கிறது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்