TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 9 , 2020 1536 days 650 0
  • சுரக்சித் தாதா – தாதி & நானா – நானி அபியான் ஆனது பிரமல் நிறுவனம் என்ற அமைப்புடன் இணைந்து நிதி ஆயோக்கினால் தொடங்கப் பட்டது. 
    • இது கோவிட் நோய்த் தொற்றின் போது மூத்தக் குடிமக்களின் உடல் நலத்தை உறுதி செய்வதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • ஜார்க்கண்ட் மாநில அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் பணியாளர்களின் பணி நேரத்தை அதிகரிப்பதற்காக மூன்று திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
    • பிர்சா ஹரித் கிராம யோஜனா, நீலாம்பர் – பீதாம்பர் ஜல் சம்ரித் யோஜனா மற்றும் வீர் சாஹித் போட்டோ ஹோ கேல் விகாஸ் யோஜனா ஆகியவை இந்த 3 திட்டங்களாகும்.
  • அமெரிக்க அதிபர் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பிற்கான அமெரிக்காவின் தூதராக இந்திய-அமெரிக்கத் தூதரக அதிகாரியான மணீஷா சிங் என்பவரை நியமித்துள்ளார்.
  • ஒரு நிகழ்நேர மாநாடான உலகளாவிய மீட்பு சர்வதேச உறுதிப்பாட்டு கருத்தரங்கானது சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இருப்பினும், அமெரிக்க மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.
  • மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகமானது “ஆற்றல் செயல்திறன் நடவடிக்கைகளின் தாக்கம் – 2018/19” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையானது ஆற்றல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகளின் வருடாந்திரக் குறைத்தலை ஆய்வு செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்