TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 10 , 2020 1535 days 734 0
  • முஸ்தபா கட்ஹிமி என்பவர் ஈராக்கின் புதிய பிரதமராக உருவெடுத்துள்ளார்.
    • இதற்கு முன்பு, அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களின் காரணமாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அடேல் அப்துல் மஹிதி என்பவர் அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
  • வங்கியியல் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் கூட்டுறவு வங்கிகள் “வங்கித் துறை நிறுவனத்தின்” வரையறைக்குள் வரும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
    • இது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றமானது சர்பேசி சட்டம், 2002ன் கீழ் கடனை மீட்பதற்கான நடைமுறையை வழங்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டு உள்ளது.
  • மகாராஷ்டிர மாநில அரசானது ஜுன் 30 ஆம் தேதி வரை அம்மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான பணி நேரத்தை 12 மணி நேரமாக நீட்டித்துள்ளது.
    • இடப்பெயர்வுத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி உள்ளதால் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் தொழிலாளிகளின் பற்றாக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • “சஞ்ஜீவனி” என்ற செயலியானது ஆயுஷ் அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
    • இது கோவிட் – 19  நோய்த் தொற்றைத் தடுப்பதில் ஆயுஷ் முறையை அடிப்படையாகக் கொண்ட இடையீடுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு உதவ இருக்கின்றது. 
  • தமிழ்நாடு மாநில அரசானது தனது பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருக்குப் பொருந்தும்.
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டமானது இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக உள்ள நடிகை தியா மிர்சாவின் பதவிக் காலத்தை 2022 ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்