TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2020 1533 days 780 0
  • வழக்கமாக லோகஸ்ட் என்ற வெட்டுக் கிளிகள்  ஜூலை-அக்டோபர் மாதத்தில் தான் வரும். ஆனால் இவை தற்போது அதற்கு முன்னரே இராஜஸ்தானில் கண்டறியப் பட்டுள்ளன.
    • இவை (Locusts) சிறிய அளவு மூக்கைக் கொண்ட ஒரு வகை வெட்டுக்கிளி இனமாகும்.
  • ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB - Asian Infrastructure Investment Bank) இந்தியாவினால் தொடங்கப்பட்டுள்ள “கோவிட் – 19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலைத் திட்டத்திற்காக” 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 
    • இது தேசிய சுகாதாரத் திட்டம், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றினால் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது இந்திய விமானப் படையின் 37 விமானத் தளங்களின் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதற்காக டாடா பவர் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட நச்சுயிரியல் மையமானது சர்வதேச மருத்துவ நச்சுயிரியலாளர்கள் மன்றமான புகழ்பெற்ற உலகளாவிய வைரஸ் அமைப்பிற்கான (GVN - Global Virus Network) உறுப்பினர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
    • புகழ்பெற்ற GVN அமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தைப் பெறும் நாட்டின் முதலாவது நிறுவனம் இதுவாகும்.
  • ஜார்க்கண்ட் மாநிலமானது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறை, 2011 என்ற விதிமுறையின் கீழ் அடுத்த 1 ஆண்டுக் காலத்திற்கு மக்னீசியம் கார்பனேட்டைக் கொண்டுள்ள பான் மசாலாவின் உற்பத்தி, விற்பனை மற்றும் கையிருப்பு நிலைக்குத் தடை விதித்துள்ளது.
    • மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து பான் மசாலா மீது தடை விதித்த 3வது மாநிலம் ஜார்க்கண்ட் ஆகும்.
  • தமிழ்நாடு அரசானது இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.
    • இது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் கோவிட் - 19  நோய்த் தொற்று ஏற்படுத்திய ஒட்டு மொத்த உடனடித் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றது.
  • சீனாவைக் குறிக்கும் விதமாக கொரானா நோய்ப் பாதிப்பானது இரண்டாம் உலகப் போரின் போது பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல் அல்லது 9/11 தீவிரவாதத் தாக்குதல் ஆகியவற்றை விட மிக அதிகமாக அமெரிக்காவை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
  • “மகாகவச் செயலி” என்ற ஒரு நிகழ்நேர எண்முறை அல்லது டிஜிட்டல் தொடர்பு கண்காணிப்புச் செயலியானது மகாராஷ்டிரா அரசினால் தொடங்கப் பட்டுள்ளது.
    • இது நோய்த் தொற்று தொடர்பைக் கண்காணித்தல், புவியியல் ரீதியாக பாதுகாப்பு அரண் அமைத்தல், தனிமைப்படுத்தப்பட்ட கோவிட் – 19 நோயாளிகளைக் கண்காணிப்பதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு உதவுதல்  மற்றும் பங்களிப்பு அளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள குடிமக்களை அனுமதிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்