TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 14 , 2020 1531 days 685 0
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது சுரக்சா விற்பனைக் கூடம் என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • பெங்களூரு நகர மாநகராட்சியானது அம்மாநகர மக்களுக்காக சுவாசக் கோளாறு தொடர்பான ஆரோக்கியத்தை  சுயமாக தன்னைத் தானே சோதனை செய்வதின் தேவை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “பிராண வாயு” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • நீட்டிய ஆமை அல்லது சால் வன ஆமை என்ற ஆமை இனத்தின் ஒரு வகையானது தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் சில பகுதிகளில், அதிலும் குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் ஒரு வகை உயிரினமாகும்.
    • பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு நிறப் பட்டியலில் இது ஒரு “மிகவும் அருகிய இனமாக” பட்டியலிடப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது பொது முடக்கத்தின் போது இதர மாநிலங்களிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு திரும்பி வரும் இடப்பெயர்வுத் தொழிலாளர்களுக்காக “பிரவசி ராஹத் மித்ரா” என்ற ஒரு கைபேசி செயலியைத் தொடங்கியுள்ளது.
  • ஐரோப்பிய இதயம் என்ற ஒரு பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின்படி, பெண்களை விட ஆண்களே கோவிட் -  19 நோய்த் தொற்றிற்கு அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
    • இந்த ஆய்வானது ஆண்களின் இரத்தத்தில் இருக்கும் ஏசிஇ2 என்ற நொதியின் உயர்வரம்பு நிலையானது கொரானா வைரஸ் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளைத்  தாக்க வழிவகை செய்கின்றது.
  • இரத்த வெள்ளை அணுக்களின் எதிர்வினையை ஒழுங்குபடுத்துவதற்காக அறியப் படும் வைட்டமின் D ஆனது அதிக அளவிலான அழற்சி சைட்டோகைனிசை (நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உடலின் நோய் எதிர்ப்பு வினை) வெளியிடுவதிலிருந்து இரத்த வெள்ளை அணுக்களைத் தடுக்கின்றது.
    • கோவிட் வைரசானது “சைட்டோகைன் புயல்” என்று அழைக்கப்படும் அதிகப்படியான ஒரு அழற்சி சார்ந்த சைட்டோகைனிற்குக் காரணமாக இருக்கின்றது.
  • ஈரானைச் சேர்ந்த ஏவுகணையானது ஓமன் வளைகுடாவில் நடைபெற்ற ஒரு பயிற்சியின் போது தனது சொந்த உதவிக் கப்பலையேத் தாக்கியது.
  • தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு (சடை வகை  கலைப் பணி) மற்றும் பெரம்பலூரின் அரம்பாவூர் மரச் செதுக்கல் வேலைப்பாடு ஆகியவை புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளன.
    • தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு என்பது (தஞ்சாவூர் சடை வேலைப்பாடு) அஸ்சைனோமீன் அஸ்பெரா என்ற சதுப்பு நிலத் தாவரத்திலிருந்துப் பெறப்பட்ட சடையிலிருந்துத் தயாரிக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்