TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 18 , 2020 1527 days 804 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organisation) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பில் இந்தியா காணொலி வாயிலாகக் கலந்து கொண்டது.
    • இது தற்போதைய தலைமை நாடான ரஷ்யாவினால் நடத்தப் பட்டது.
  • சமீபத்தில் இந்திய இராணுவம் இந்தியக் குடிமக்களுக்காக 3 ஆண்டு கால தன்னார்வ பணிச் சேவையைச் சோதனை அடிப்படையில் பரிந்துரைத்துள்ளது. இது நிரந்தரப் பணி/சேவை என்ற கருத்துருவிலிருந்து உள்ளிருப்புப் பயிற்சி/தற்காலிக சேவை என்ற கருத்துருவிற்கு மாறும் முயற்சியாகும்.
    • இந்திய இராணுவமானது தனது குடிமக்களை அதிகாரிகள் மற்றும் இதர பிரிவுகள் என்ற இரண்டிலும் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. 
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிச் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் என்பது தேசியத் தொழில்நுட்ப தினத்தன்று நடத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் கருத்தரங்காகும்.
    • இது இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்புடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு தனிச்சுதந்திர அமைப்பான தேசிய வளர்ச்சி வாரியத்தினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
  • பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் ஒரு உதவியினை “அவசர கால உதவித் திட்டக் கடனாக“ வழங்க இருக்கின்றது.
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநில அரசுகள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அதன் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. அத்திட்டத்தின் தேசிய இலக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இந்த மாநில அரசுகள் இதனை அடைய இருக்கின்றன.
    • இந்த 2 மாநில அரசுகளும் தங்களது திட்டங்களை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையிடம் அளித்துள்ளன.
  • இந்தியா 32வது காமன்வெல்த் சுகாதாரத் துறை அமைச்சர்களின் சந்திப்பில் காணொலி மூலமாகக் கலந்து கொண்டது.
    • இதன் கருத்துரு, “கோவிட் – 19 நோய்க்கு எதிராக ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட காமன்வெல்த் எதிர்வினையை வழங்குதல்” என்பதாகும்.
  • சமீபத்தில் ஐக்கிய நாடுகள் ஆனது உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள், 2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்