TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 17 , 2020 1528 days 656 0
  • ரூர்க்கி-ஐ.ஐ.டியின் பேராசிரியர் கமல் ஜெயின் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
    • இது நிமோனியாவின் எந்த விதமான அறிகுறிகளையும் கண்டறிய உதவுகிறது. மேலும் இது சந்தேகத்திற்குரிய நோயாளியின் மீது எக்ஸ்-கதிர் சோதனையை (X-ray scan)  பயன்படுத்தி ஐந்து விநாடிகளுக்குள் கோவிட்-19 அல்லது வேறு  ஏதேனும் நுண்ணுயிரியால் (பாக்டீரியா) இந்த  நிமோனியா ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய உதவும்.
  • மற்றொரு கிரகத்தில் இயங்கும் விமானங்களை முயற்சிக்கும் முதல் வானூர்தி என்று கருதப்படுகின்ற நாசாவின் செவ்வாய் ஹெலிகாப்டர் என்ற வானூர்திக்கு 'இஞ்சென்யூட்டி' (புத்திக் கூர்மை என்று பொருள்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
    • இந்தப் பெயரை இந்திய வம்சாவளிப் பெண்ணான வனீசா ரூபானி என்பவர் வழங்கியுள்ளார்.
  • ரிலையன்ஸ் தொழிலகங்களின் தலைவரான முகேஷ் அம்பானி, மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவனத்துடன் ஒரு மிகப்பெரும் ஒப்பந்தத்தைச் செய்த பின்னர் மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார்.
    • ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் படி, அவர் சீனக் கோடீஸ்வரர் மற்றும் அலி பாபா நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்துக்கான மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய-அமெரிக்கரான சரிதா கோமதி ரெட்டியை நீதிபதியாக நியமித்துள்ளார்.
    • இவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஆவார்.
  • ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான உணவுப் பங்கீட்டை வழங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
    • இதன் கீழ், உணவுக்கான பணம் பெற்றோரின் வங்கிக் கணக்குகளுக்கு மாநில அரசிடம் இருந்து இணைய வழியில் மாற்றப் படும்.
  • Resistance Front (எதிர்ப்பு முன்னணி) என்பது லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாதக் குழுவின் ஒரு கிளைப் பிரிவாகும்.
    • இது காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் குழுவின் புதிய பெயராகும்.
  • தூர்தர்ஷனில் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படும் ராமானந்த் சாகரின் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொடரான 'ராமாயணம்' 7.7 கோடி பார்வையாளர்களைக் கொண்டு  தற்போது உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
    • வால்மீகியின் ராமாயணம் மற்றும் துளசிதாஸின் ராமச்சரித மனாசை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை ராமானந்த் சாகர் தயாரித்துள்ளார்.
  • பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, பாகிஸ்தான் விமானப்படையின் விமானியாக ராகுல் தேவ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • கோவிட் 19 தொற்றுநோய்க்கான இந்தியாவின் முதல் சோதனைப் பேருந்தானது  மும்பையில் மகாராஷ்டிரா தினத்தன்று  துவங்கப் பட்டது.
    • இந்தப் பேருந்து, முன்னாள் ஐஐடி மாணவர்கள் பேரவையின் சி-19 பணிக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்முயற்சி ஆகும். 
  • தாய்மைக்குப் பிறகு டென்னிஸ் விளையாட்டிற்கு வெற்றிகரமாக திரும்பியதற்காக ஃபெட் கோப்பை ஹார்ட் விருது (Fed Cup Heart Award) எனும் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா பெற்றுள்ளார்.
    • ஃபெட் கோப்பை ஹார்ட் விருதானது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் ஒரு முன்முயற்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்