TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2020 1525 days 753 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையானது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மீதான தேசியக் கல்வித் திட்டத்தின் (NMEICT - National Mission of Education in Information and Communication Technology) கீழ் “சமார்த் நிறுவன வளத் திட்டமிடல்” என்ற ஒரு மின்னணு முறையிலான ஆளுகைத் தளத்தை உருவாக்கியுள்ளது.
    • இந்தத் தளமானது குருஷேத்திராவில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்படுத்தப் படுகின்றது.
  • உலக வங்கியானது “இந்தியாவின் கோவிட் – 19 சிறப்புப் பாதுகாப்பு” எதிர்வினைத் திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்த நிதியானது ஏழைக் குடும்பங்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்படையும் குடும்பங்களுக்கு நிதியுதவியை அளிப்பதற்காகப் பயன்படுத்தப் பட இருக்கின்றது.
  • “எச்ஐவி”யைப் போன்று புதிய கொரானா வைரஸானது எப்பொழுதும் இருக்கக் கூடிய நோய் என்றும் முழுமையாக இதை ஒழிக்க முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 
    • சின்னம்மை மற்றும் மலேரியா போன்று மக்கட் தொகையில் அது எப்பொழுதும் தொடர்ந்து இருந்து, பரவலாகக் காணப்பட்டால் அந்நோய் “எப்பொழுதும் இருக்கக் கூடிய நோய்” (Endemic) என்று அழைக்கப் படுகின்றது.
  • சின்கோனாவின் பட்டையிலிருந்து எடுக்கப்பட்ட அல்காலாய்டு குயினைனின் நினைவாக “குயினைன் நோங்லாடியூ” என்று ஒரு கிராமத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
    • இது தோட்டப் பயிரிடுதல் காரணமாக “குயினைன்” என்று அழைக்கப்படும் மேகாலயாவில் உள்ள ஒரு கிராமமாகும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியக் கடலோரப் பகுதிகளுக்கு “ஆம்பன் புயல்” என்ற ஒரு புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
    • இந்தப் புயலின் பெயரானது தாய்லாந்து நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டதாகும். இது 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பரிந்துரைக்கப்பட்ட 64 புயல் பெயர்களைக் கொண்ட அசல் பட்டியலில் உள்ள கடைசிப் பெயராகும்.
  • மின்னணு - தேசிய வேளாண் சந்தை முன்னெடுப்பானது 1000 சந்தைகள் என்ற தனது நிர்ணயிக்கப்பட்ட சந்தைக்கான இலக்கை எட்டியுள்ளது.
    • இது “ஒரு தேசம் ஒரு சந்தை” என்ற தளத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்