TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2020 1522 days 756 0
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமானது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்திற்கு ஊக்கமளிப்பதற்காக பாதுகாப்பு சார்ந்த 26 பொருட்களின் கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இது பொதுக் கொள்முதல் ஆணை, 2017 என்ற ஆணையின் மீதான ஒரு திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • மே 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாக்கத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • இந்தக் கட்டுமானப் பணிக்கான 60% நிதியானது மத்திய அரசினாலும் மீதம் உள்ள நிதியானது மாநில அரசினாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
  • தமிழ்நாடு சுகாதாரத் துறையானது சென்னையில் 3 நகராட்சி மண்டலங்களில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட 34 வார்டு பகுதிகளில் கோவிட் – 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தீவிர “நுண் திட்டத்தை” தொடங்கியுள்ளது.
  • ஐரோப்பிய நாடான ஸ்லோவேகியா நாடானது கொரானா வைரஸ் தொற்றிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர் தலா இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்