TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 24 , 2020 1521 days 604 0
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தொட்டு உள்ளது.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டமானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஜீவார் என்ற விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமான சூரிச் சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு (Zurich Airport International AG) உள்துறை அமைச்சகமானது பாதுகாப்பு அனுமதியை வழங்கி உள்ளது.
    • இந்தப் பசுமைவழித் திட்டமானது புது தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு மாற்றாக கருதப்படுகிறது.
  • மத்திய நிதி அமைச்சகம் தேசிய எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பிரச்சாரத்திற்கான அடிப்படைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளது.
    • 2020 ஆம் ஆண்டில் நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் 3 ஆம் வகுப்பில் அடிப்படையான கல்வியறிவு மற்றும் எண்ணறிவை அடைவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.
  • நேரடி வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் மாநில விவசாயிகளுக்கு "குறைந்தபட்ச வருமானம் கிடைப்பதை" உறுதி செய்வதற்காக சத்தீஸ்கர் அரசாங்கத்தால் ராஜீவ் காந்தி நியாய யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு  தினமான மே 21 அன்று இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் மாநிலம் வழியாகச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்தியப் பிரதேச காவல் துறையால் சரண் படுகா என்ற பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.
    • இந்தப் பிரச்சாரத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் பாத வலியைக் குறைக்க காலணிகள் மற்றும் செருப்புகள் (shoes and slippers) வழங்கப் பட்டன.
  • கேரளாவின் அனக்கம்போயில்-கல்லடி-மேப்படி பாதையில் ஒரு இருவழிச் சுரங்கப் பாதையை அமைக்க மத்திய அரசானது அனுமதி அளித்துள்ளது.
    • 6.5 கி.மீ தூரமுள்ள இந்த சுரங்கப்பாதை நாட்டின் மூன்றாவது நீளமான சுரங்கப் பாதையாக இருக்கும்.
  • மகாராஷ்டிராவில் விவசாயிகளின் நலனுக்காக மீ அன்னபூர்ணா என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்