TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2020 1520 days 679 0
  • சமீபத்தில் புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோதுமையில் “Rht14” மற்றும் “Rht18” என்று 2 மாற்று குள்ளத் தன்மையுடைய மரபணுக்களைக் கண்டறிந்துள்ளனர்.
    • இது நெற்பயிர்க் கழிவு எரிப்பை (தாளடிப் பயிர் எரிப்பு) குறைக்க உதவ இருக்கின்றது.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறையில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மின்னணு முறையிலான ஒரு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
    • இந்த மாநாடானது 2025 ஆம் ஆண்டு வாக்கில் 25 பில்லியன் மதிப்பிற்கு பாதுகாப்பு உற்பத்தி என்ற தனது இலக்கை அடைய இந்தியாவிற்கு உதவ இருக்கின்றது.
  • சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் கடந்த 18 ஆண்டுகளாக நீடித்து வரும் திறந்த வான்வெளி ஒப்பந்தத்திலிருந்து விலகும் தனது திட்டத்தை அறிவித்துள்ளார்.
    • இந்த ஒப்பந்தமானது 2002 ஆம் ஆண்டில் இராணுவ வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக கையெழுத்திடப் பட்டது. 
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தை 4.4%லிருந்து 4% ஆகக் குறைத்து அறிவித்துள்ளது.
    • தலைகீழ் ரெப்போ விகிதமானது 3.35% ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்