TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 27 , 2020 1518 days 620 0
  • உலக தைராய்டு தினமானது மே 25 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • புலம்பெயர்ந்தோரின் நலனுக்காக ஓர் இடம்பெயர்வு ஆணையத்தை அமைக்கப் போவதாக உத்தரப் பிரதேச அரசானது அறிவித்துள்ளது.
    • புலம்பெயர்ந்தோரின் திறனைப் பொருத்து அந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முதன்மையாகக் கொண்டு இந்த இடம்பெயர்வு ஆணையம் செயல்பட உள்ளது.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பிஎஸ்-VI விதிமுறைக்கு வேண்டி எல்-7 வகைக்கான (நான்கு சக்கர வண்டி) உமிழ்வு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
    • 400 கிலோவிற்கு மேல் நிறை கொண்ட நான்கு சக்கர வாகனங்கள் எல்-7 பிரிவின் கீழ் சேர்க்கப் பட்டுள்ளன. இது முழுமையாக ஒரு மகிழுந்தைப் போன்று இருக்கும் வகையில் மூன்று சக்கர வாகனத்திற்கான அளவில் நான்கு சக்கரங்களைக் கொண்டிருக்கும்.
  • மிசோரம் மாநிலமானது விளையாட்டுத் துறைக்கு ‘தொழில்துறை’ என்ற தகுதிநிலையை வழங்கியுள்ளது. இவ்வாறு செய்த முதல் மாநிலம் இதுவாகும்.
    • இது முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் விளையாட்டு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்