TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2020 1516 days 658 0
  • இந்தியாவின் ஆரோக்கிய சேது என்ற செயலியானது உலகின் மிகப்பெரிய தடம் தொடர்பு கண்காணிப்புச் செயலியாக உருவெடுத்துள்ளது. இது 40 நாட்களில் மட்டும் 11 கோடி 40 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.
  • சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது விமர்சனத்திற்கு உள்ளான மலேரியா நோய் எதிர்ப்பு மருந்தான “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்” என்ற மருந்தின் சோதனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது கோவிட் – 19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
  • கூகுள் பிளே ஸ்டோரானது கேரளாவில் மதுவை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட இருக்கும் “BevQ” என்ற செயலிக்கு வேண்டி தனது ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • மத்திய அரசானது “MyGov” குழுவால் நடத்தப்பட இருக்கும் தீங்கு விளைவிக்கும் பிழை (BUG) கண்காணிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
    • இந்தத் திட்டமானது ஆரோக்கிய சேது செயலிக்குள் பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டுபிடிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு வெகுமதிகளை வழங்க வழிவகை செய்கின்றது.
  • ஆங்கிலேய எழுத்தாளரான J.K. ரௌலிங் “The Ickabog” என்ற தனது புதிய குழந்தைகள் புத்தகத்தின் முதல் 2 அத்தியாயங்களை வெளியிட்டுள்ளார்.
    • 2007 ஆம் ஆண்டில் “ஹாரி பாட்டர்” மற்றும் “கொடிய புனிதம்” ஆகியவை வெளியிடப்பட்டதற்குப் பிறகு அவரது முதலாவது குழந்தைகள் புத்தகம் இதுவே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்