TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 30 , 2020 1515 days 594 0
  • உலகம் முழுவதும் மே 30 ஆம் தேதியன்று இ-சிகரெட்டுகளைப் போன்று இருக்கும் ஒரு சாதனத்திற்கான உலக தினமானது அனுசரிக்கப்பட இருக்கின்றது. இது உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்திற்கு முந்தைய தினத்தில் அனுசரிக்கப்பட இருக்கின்றது.
    • இது இ-சிகரெட்டுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியாத நபர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மே 28 ஆம் தேதி தேதியானது உலகப் பட்டினித் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
    • இது பட்டினித் திட்டத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • கர்நாடக மாநில அரசானது தனது அனைத்துக் குடிமக்களின் தரவுகளைச் சேகரிப்பதற்காக “மாநில சுகாதாரப் பதிவேட்டை” தொடங்கவுள்ளதாக அறிவித்து உள்ளது.
    • நாட்டில் இந்த வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது பதிவேடு இதுவாகும்.
  • நீண்ட தொலைவு கொண்ட விமானப் பயணத்திற்கான முன்னோக்கு விமானப் பயணச் செயல் திட்டத்தின் கீழ் ரஷ்யா தனது முதலாவது மறைந்து இருந்து தாக்கும் வகையிலான குண்டு வீசும் விமானத்தைக் கட்டமைத்துள்ளது.
  • தொகுப்பு வேக நடவடிக்கை என்பது கோவிட் – 19 தடுப்பு மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் நோய்க் கண்டறிதல் ஆகியவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட ஒரு பொது-தனியார் பங்களிப்புத் திட்டமாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஆத்மநிர்பர் பாரத் என்ற திட்டத்தின்கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கும் கடன்களுக்கு அபாயமற்ற தகுதி நிலை (Zero risk weight) என்ற ஒன்றை வங்கிகள் வழங்க அனுமதிக்க இருக்கின்றது.
    • அபாயமற்றத் தகுதி நிலை என்பது இந்தக் கடன்களுக்கு வங்கிகள் கூடுதலாக மூலதனத்தைப் பிணையாக வைக்க வேண்டியதில்லை என்பதைக் குறிக்கின்றது.
  • கொரானா வைரஸ் அற்ற நாடாக தன்னைத் தானே அறிவித்த ஐரோப்பாவின்  முதலாவது நாடு மான்டிநீக்ரோ ஆகும்.
    • மான்டிநீக்ரோ ஆனது ஒரு பால்கன் நாடாகும்.
  • அமெரிக்காவானது ஹாங்காங்கை சீனாவிடமிருந்துப் பிரிந்து இருக்கும் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாக கருதவில்லை என்று கூறியுள்ளது. 
    • இது அமெரிக்காவுடனான ஹாங்காங்கின் சிறப்பு வர்த்தக நிலையின் இழப்பிற்கு வழி வகுக்கும். மேலும் இது அந்நாடு ஒரு சர்வதேச நிதி மையமாக தனித்து நிற்பதற்கும் அச்சுறுத்தலாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்