TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 31 , 2020 1514 days 715 0
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் “மின்னணு பாரம்பரியக் களஞ்சியம்   மற்றும் மின்னணு கலைஞர் களஞ்சியம் ஆகியவற்றை உருவாக்கிட வேண்டி பரிந்துரை செய்துள்ளது. எனவே இதன் மூலம் புகழ்பெற்ற கலைஞர்கள் தங்களது கலைகளைக் கற்பிப்பதற்கு வேண்டி காணொளி நிகழ்ச்சித் தொகுதிகளை உருவாக்கலாம்.
  • சீன நாடாளுமன்றம் ஹாங்காங்கிற்காக ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இது முதன்முறையாக ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்காக வேண்டி  (SAR - Special Administrative Region) தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை வரைவு செய்ய சீனாவிற்கு (பெய்ஜிங்) அதிகாரம் அளிக்கின்றது.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தில் 800 கிலோ மீட்டர் சாலையை மூலிகைச் சாலையாக மேம்படுத்த இருக்கின்றது.
    • இந்த மூலிகைச் சாலையானது தனது இரு புறங்களிலும் உள்ள நிலப்பகுதியில் மருத்துவ மற்றும் மூலிகை மரங்களைக் கொண்டிருக்கும்.
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வேண்டி ரோஜ்கர் சேது யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
    • இந்தத் திட்டமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருக்கின்றது.
  • தற்பொழுது மத்திய நெகிழிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது மத்தியப் பெட்ரோலிய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்று பெயர் மாற்றப் பட்டுள்ளது. 
    • இந்தப் பெயர் மாற்றமானது தமிழ்நாடு சமூகப் பதிவுகள் சட்டம், 1975 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின்படி, சீரம் இந்திய நிறுவனம், பாரத் பயோடெக், சைடஸ் கேடிலா மற்றும் இந்திய தடுப்பு மருந்து நிறுவனம் ஆகியவை கோவிட் – 19 தடுப்பு மருந்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களாகும்.
  • புகழ்பெற்ற ஜோதிடரான பேஜன் டருவாலா என்பவர் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் காலமானார்.
    • பேஜன் டருவாலா என்பவர் “ஆயிரம் ஆண்டுகால தீர்க்க தரிசனம்” என்ற புத்தகத்தில் கடந்த 1000 ஆண்டுகளில் 100 சிறந்த ஜோதிடர்களிடையே தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளார்.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரான அஜித் யோகி சமீபத்தில் காலமானார்.
    • இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்திய தேசியக் காங்கிரசின் சார்பாக முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
  • தியரி டெலபோர்டி என்பவர் விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
    • இதற்கு முன்பு, இவர் கேப்ஜெமினி குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்