TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2020 1513 days 956 0
  • மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகமானது டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது தேசியத் தொழில் சேவைத் திட்டத்தின் கீழ் தொழில்சார் திறன் பயிற்சியை வழங்க இருக்கின்றது.
  • இந்தியாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கான பயிற்சியை ரஷ்யாவில் மீண்டும் தொடங்கியுள்ளனர்.
    • இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவின் காகரின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி சோதனைப் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.
  • அமெரிக்காவானது உலக சுகாதார அமைப்புடனான (WHO - World Health Organisation) தனது உறவை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொண்டது.
    • WHOவிற்கு வழங்கப்படும் நிதியை இதர உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் நிதியை எதிர்பார்க்கும் உலகளாவியப் பொதுச் சுகாதாரத் தேவைகளுக்கும் அவசரமாக நிதி தேவைப்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
  • கேரளா கண்ணாடியிழை வலையமைப்புத் திட்டம் (K-FON/Kerala Fibre Optic Network) எனப்படும் கேரள மாநிலத்தின் முதன்மைத் திட்டமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
    • K-Fon திட்டத்தின் கீழ் கேரள மாநில அரசானது மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் அலுவலகங்களையும் கண்ணாடியிழை அமைப்புடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது இந்தியத் தேசிய சிறப்பு மாதிரியைத் தொடங்கியுள்ளது.
    • இந்த மாதிரியானது கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவலைக் கண்காணிப்பதற்காக உதவுகின்றது.
  • சர்வதேச எவரெஸ்ட் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஆகியோர் 1953 ஆம் ஆண்டு மே 29 அன்று முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது. இந்த மலை உச்சியை அடைந்த முதலாவது நபர்கள் இவர்களே ஆவர். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்