TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2020 1507 days 581 0
  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தளவாடப் பொருட்கள் உதவிக்கு வேண்டி இராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதற்காக “பரஸ்பர தளவாடப் பொருட்கள் உதவி ஒப்பந்தம்” (MLSA - Mutual Logistics Support Agreement) என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளன.
  • மத்திய சாலைப் போக்குவரத்து  மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி “நெடுஞ்சாலைகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இறப்புகளைத் தடுத்தல்” எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
    • இந்தப் பிரச்சாரமானது சாலை விபத்துகளின் விகிதத்தைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியை இந்தியா நடத்தும் என்று ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.
    • 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தியா இந்தப் போட்டியை நடத்துகின்றது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ரூ.500 கோடி நிதியுடன் பண வழங்கீட்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தை உருவாக்கியுள்ளது.
    • இந்த நிதியானது நாட்டில் விற்பனை முனைய உள்கட்டமைப்பு மற்றும் இதர டிஜிட்டல் பணவழங்கீட்டு உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்காக உருவாக்கப் பட்டுள்ளது.
  • அம்பர்நயா நதியில் எண்ணெய் கொட்டப்பட்டதை அடுத்து அவசர நிலையை ரஷ்யா அறிவித்துள்ளது.
    • அம்பர்நயா நதியானது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஆர்க்டிக் கடலிற்குள் பாய்கின்றது.
  • மத்திய மின்துறை அமைச்சரான R.K. சிங் உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிப்பதற்காக “#icommit” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • இந்த முன்னெப்பானது எதிர்காலத்தில் வலுவான மற்றும் தாங்கும் சக்தி கொண்ட ஆற்றல் அமைப்பை உருவாக்குவதற்காக ஆற்றல் திறன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நீடித்த தன்மை குறித்து தொடர்ந்து பணியாற்றுவதற்காக அனைத்துப் பங்காளர்கள் மற்றும் தனிநபர்களை அழைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்